கலைமகள் தீபாவளி மலர் 2026
புதிய செய்திகள் மற்றும் கவரும் வடிவமைப்புடன் மலர்ந்துள்ளது கலைமகள் தீபாவளி மலர். இலக்கிய இதழான கலைமகள் 95 ஆண்டுகள் நீண்ட பயணத்துடன் தீபாவளி மலர் தொடர்கிறது. இதில் கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், ஆன்மிக செய்திகள், முதலீடு வழிகாட்டுதல், வரலாற்று ஆய்வுகள், பயண செய்திகள், துணுக்குகளுடன் தகவல் களஞ்சியமாக உள்ளது. காசி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள, ‘ஆன்மிக அழகியல் காசி’ கட்டுரை உதவுகிறது. நிதி முதலீடு செய்வதில் நவீன தொழில் நுட்பம், தங்கத்தை எளிமையாக வாங்கி குவிக்க சுலபமான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. இது புதிய சொத்து வாய்ப்புகளை அறிந்து கொள்ள வழிவகுக்கிறது. குழந்தை வளர்ப்பில் நவீன அணுகுமுறை, உடல் இயக்கம் பற்றிய மருத்துவ அறிமுகம், பயண அனுபவத்தின் குதுாகலம் பற்றி உரைக்கிறது. ஆஸ்திரேலிய குடியேற்றம் பற்றிய தகவல்களுடன், கலகலப்பூட்டும் வகையில் உள்ளது கலைமகள் தீபாவளி மலர். – ஒளி




