₹ 200

சமூக சூழலை அலசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சாமியாரின் வாக்கு பலிக்குமா என்பதை, ‘அன்னதானம்’ கதை சாமானியர் நம்பிக்கை வழியாக கூறுகிறது. மகள் அப்பாவுக்கு எழுதும் கடிதம், மனித மனங்கள் நேரடியாக பேச முடியாததை, ‘யாரோ வருகிறார்கள்’ கதை விவரிக்கிறது. மகனை அரசு பள்ளியில் சேர்க்கும் தந்தையின் மனப் போக்கை, ‘அப்பாவும் மகனும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலரும்’ என்ற கதை அலசுகிறது. மதிப்பெண்ணா, நல்லொழுக்கமா என்ற கேள்விக்கு விடை தேடுகிறது. பேருந்தில் பயணியரிடம் பணம் திருட முயலும் நபரின் அலப்பறையை, ‘பிக்பாக்கெட் ஜாக்கிரதை’ கதை எச்சரிக்கை ஊட்டும் வகையில் கூறுகிறது. ஒவ்வொரு கதையும், சமூக போக்கு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளன. சுவாரசியமான வாசிப்புக்கு ஏற்ற சிறுகதை நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ