/ கட்டுரைகள் / மனுக்கள் எழுதும் முறை!

₹ 200

விண்ணப்பம், புகார், பெட்டிஷன் என்ற பெயர்களில் உள்ள கோரிக்கை மனு எழுத வழிகாட்டும் நுால். எப்படி எழுதுவது, யாரிடம் தருவது என்பதை விளக்குகிறது. ஒரு பிரச்னையை உரிய முறையில் வெளிப்படுத்தினால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும். அதிக பக்கங்கள் எழுதினால் தான் கருத்துக்கு வலு சேர்க்கும் என நினைத்து, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பர் சிலர். வேண்டிய தகவலை சுருக்கமாக, தெளிவாக உரிய முறையில் உணர்த்துவதே தீர்வுக்கு வழி என்பதை உரைக்கிறது. தகவலை மிகைப்படுத்தினால் எதிர்மறை விளைவு ஏற்படும் என எச்சரிக்கிறது. எழுதிய மனுவை எவ்வாறு, யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரமும் உள்ளது. கோரிக்கையை தெளிவாக எடுத்துரைக்க வழிகாட்டும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை