/ கதைகள் / நயனவாசினி

₹ 260

கருணை, காதல், பாசம், பரிவு எல்லாம் நிறைந்த நாவல் நுால். இந்த கதையின் கதாநாயகி விழிகளின் வழியே அத்தனையும் வருகிறது. ஜாதி மறுப்பு காதல் பெண் குடும்பத்தால் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஆனால், காதலன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதால் கடும் சிக்கல் ஏற்படுகிறது. இதை மீறி, அன்னை மீனாட்சியை சாட்சியாக வைத்து திரு மணம் நடக்கிறது. இதற்கு இடையே வரும் சிக்கல்கள் நிறைந்த போராட்டத்தை தெளிவாக காட்டுகிறது. கதை, மனதை கவரும் வகையில், ‘காதல் ஜென்மங்களை கடந்தும் உயிரோடு ஒட்டி இருக்கும் வினோத விலங்கு’ என்பது போன்ற கருத்து, பல பகுதிகளில் வர்ணனையாக உள்ளது. காதலித்து திருமணம் செய்த தம்பதி, ஜவுளி தொழில் துவங்கி வெற்றி பெறுவதாக முடிகிறது. காதலுக்கு மரியாதை தரும் நாவல். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி