/ புத்தக மதிப்புரை / பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு
சிவபெருமானின் புதல்வர்களில் ஒருவரான பைரவரின் தோற்றம், வழிபாடு பற்றிய தகவல்களை தரும் நுால். பைரவருக்கு அமைந்த கோவில்கள், அவரைப்பற்றிய அருட்பா மாலைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. சிவனின் அம்சமாகவும், கோவில்களில் காவல் தெய்வ மாகவும் விளங்கும் பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமியே உகந்த நாள் என்கிறது. எட்டு வகை மலர்கள், எட்டு வகை அன்னங்களுடன் வழிபட கூறுகிறது. பத்து இடங்களில் கோவில்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மனின் தலையைக் கொய்த, சனி பகவானின் குருவான கால பைரவரின் அருள் ஆற்றல்களை எடுத்துரைக்கிறது. காசியில் எட்டு பைரவர்கள் பற்றியும் கூறுகிறது. பக்தர்களுக்கு உதவ அருட்பாமாலை, பைரவர் பதிகம், சில மந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ள நுால். – பின்னலுார் விவேகன்




