/ கவிதைகள் / பத்தாயம்

₹ 225

வாழ்வு அனுபவங்களை சிந்தனை மிக்க கவிதைகளாக தரும் நுால். நீரில் அமிழ்ந்து விடாத பந்து போல் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் தருணங்கள் நெகிழ்வுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உயிர்க்காலம், புலரி, விழியோசை, தலைக்குளம், கேணி போன்ற தலைப்புகளில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன. அவற்றில் சுவாரசியமும், சோகமும் கலந்து வெளிப்பட்டுள்ளன. ‘மின்னல் கொடியில் பூப்பறிப்பவள்’ என்ற தலைப்பில், ‘நீராதாரத்தை தேடி, நாடு தாண்டும் பறவையைப் போல்’ என உவமை கூறி, வாழ்வின் சிறப்புகளை சுவைபட உரைக்கிறது. மழைத் துளிகள், ஆகாயத்துக்கும் பூமிக்கும் கால்பரப்பி நிற்பதாக கற்பனை செய்து சிலிர்ப்பு ஊட்டுகிறது. வித்தியாசமான சிந்தனை மற்றும் நயமான வர்ணனைகளுடன் அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.– ராம்