/ புத்தக மதிப்புரை / ரெட்டைக்கிடா
ரெட்டைக்கிடா
பிராப்தம் முதல் உயிர் இருக்கு வரை 13 தலைப்புகளில் சிறுகதைகளை செதுக்கி நுாலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர் சுருளி காந்திதுரை. அவரின் ஒவ்வொரு கதைகளிலும் சமூக நலன் பிரதிபலிக்கிறது. இந்நுாலில் உவமைகள் கதையை மெருகூட்டும் வகையில் கவனமாக கையாளப்பட்டுள்ளது.உறவுகளுடன் எழும் ஈகோ பிரச்னையை நகைச்சுவையுடன் அணுகியிருப்பது சிறப்பு. நம் அன்றாட காணும் காட்சிகளை, கதாப்பாத்திரங்களின் வழியே வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். வட்டார மொழியில் சிறுகதை படிக்க விரும்புவோர் படிக்க வேண்டிய நுால். – ரெங்கா




