/ புத்தக மதிப்புரை / சாகாநிலை சாத்தியமே வள்ளலார் வாக்கு
சாகாநிலை சாத்தியமே வள்ளலார் வாக்கு
வள்ளலாரின் பெருவாழ்வு குறித்து விளக்கமாக கூறும் நுால். சன்மார்க்கப் பெருநெறியை விரிவாக விளக்குகிறது. கொடிய சொல் பேசாது, கொடிய சொல் கேட்காது, பொய் சொல்லாதிருத்தலின் சிறப்பை விவரிக்கிறது. சினம் என்பது உள்வேக்காடு என விவரிக்கிறது. உணவு, உடலுறவு, நீண்ட துாக்கம், பயம் ஆகியவை நஷ்டம் அடைய செய்யும் என்கிறது. கோபம், காமம், மோகம், மதத்தை அவசியம் ஒதுக்க வலியுறுத்துகிறது. வள்ளலார் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு, தக்க விளக்க உரையும் தரும் நுால். – சீத்தலைச்சாத்தன்




