/ கட்டுரைகள் / சிறை ஆதி முதல் அந்தம் வரை (பாகம் – 1)
சிறை ஆதி முதல் அந்தம் வரை (பாகம் – 1)
சிறைச்சாலை நடைமுறைகளை கூறும் நுால். அரசு ஆணைகள், சிறை விதிமுறைகள், நிர்வாக சுற்றறிக்கைகள், நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறைகள், விசாரணை ஆவணங்கள் துணையுடன் எழுதப்பட்டுள்ளது. சிறையில் நடக்கும் விதி மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. மனித நேய அடிப்படையில் சிறை இயக்கத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. சிறையில் நடக்கும் ஊழல்களை எடுத்துக் காட்டுவதுடன், நடைமுறையில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தகவல்களை பகிர்கிறது. சிறைச்சாலையில் கைதிகளுக்கு உள்ள சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையின் அமைப்பு, இயக்கம், செயல்பாடு பற்றி அறிந்து செயல்படுவதற்கு உதவும் நுால். – ராம்




