/ இசை, இயல், நாடகம் / கண்ணீரும் இனிக்கின்றதே!

₹ 220

குடியால் அழிந்த கணவரை பிரிந்து, மகளை பாடுபட்டு வளர்த்து கலெக்டராக்கிய தாயின் கதையை கூறும் நாடக நுால். மகளை வளர்க்க பட்ட கஷ்டத்தை கூறுகிறது. அவள் உயர்ந்து நிற்பதை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து மகிழ்கிறாள் தாய். தன்னை தவிக்கவிட்டு போன கணவன் பற்றி கலெக்டரிடம் புகார் தருகிறாள். கட்டணம் செலுத்த முடியாமல், பிறர் உதவியால் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து மகளை கலெக்டராக்கியதை எடுத்துரைக்கிறது. வசனங்கள் நீண்டதாக இருந்தாலும் மனதில் கல்வெட்டாய் பதிகின்றன. சிரமப்பட்டால் மட்டுமே அரசு தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. மகளை கலெக்டராக்க ஆட்டோ ஓட்டும் தாயின் கண்ணீர் கதையாக அமைந்துள்ள நாடக நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை