/ புத்தக மதிப்புரை / தசாபுக்தியில் ஸ்ரீமத்ராமாயண பாராயண க்ரமம்

₹ 750

கிரகங்களிலும் தசா புக்தி களிலும் நிகழும் தீவினைகளை போக்க வழி கூறும் நுால். கிரகங்களின் குணம் மற்றும் அதிர்வுகளை ரிஷிகள் ஆராய்ந்து கூறியதே ஜோதிடம் என்கிறது. பிறந்த நேரம், காலம், இடம், வாழ்வின் போக்கை மாற்றியமைப்பதாக கூறப்பட்டுள்ளது. கிரக பலன்களை சரி செய்யும் பரிகார பூஜை, ஹோமம், திருமுறை, திருப்புகழ் பாராயண விபரம் உள்ளது. ஒவ்வொரு தசையிலும் வரும் ஒன்பது புக்திகளுக்கும் உரிய ராமாயண சர்க்கங்களும், பூஜை நிவேதன முறைகளும் விவரிக்கப்பட்டு உள்ளன. பால காண்டம் முதல் உத்தர காண்டம் வரை சுலோகங்கள் தரப்பட்டுள்ளன. ராமாயணம் பாராயணம் வழியாக பரிகாரத்துக்கு வழிகாட்டும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்