/ புத்தக மதிப்புரை / வளைகுடாப் போரும் சுயசார்பும்

₹ 100

எரிபொருள் உற்பத்தியில் சுயசார்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கு வழிமுறைகளையும் தெளிவு படுத்தும் நுால். எரிபொருள் பயன்பாடு மற்றும் தேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. மேற்காசிய போர் பதற்றத்தை முன்வைத்து கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் எரிபொருள் தேவை எப்படி பூர்த்தி செய்யப்படுகிறது என புள்ளி விபரங்களுடன் எடுத்துரைக்கிறது. புவிசார் அரசியலுடன், நம் நாட்டில் உள்ள வளங்கள் குறித்த விபரங்கள் விழிப்புணர்வு தரும் வகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வளங்களை பயன்படுத்துவதில் நிலவும் சந்தேகங்கள், அரசியல் சிந்தனைகளை எடுத்துக்கூறுகிறது. எரிபொருள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு தரும் நுால். – ராம்