/ ஆன்மிகம் / வணக்கம் இறைவா!
வணக்கம் இறைவா!
வேதாத்திரி மகரிஷியின் உயரிய கருத்து களை சிந்தனைக்கு விருந்தாக்கும் நுால். காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வரும் கடவுள் யார்; அவருக்கு உருவம் உண்டா என்பது குறித்தும், ஆன்மிகத் தின் சிறப்பியல்புகள் குறித்தும் விளக்கம் தருகிறது. இறை வழிபாடு, உருவ வழிபாடு மற்றும் பல்வேறு மதத்தினர் பின்பற்றும் நம்பிக்கை குறித்து பேசுகிறது. கோரிக்கை நிறைவேற கடவுளை வேண்டி வழிபாடு செய்வோர் குறித்து நகைச்சுவையாக குறிப்பிடுகிறது. பிறப்பும், இறப்பும் இல்லாத தெய்வத்திற்கு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து, ‘தெய்வ நிந்தனை’ என்ற தலைப்பில் கருத்து சொல்கிறது. மதத்தின் பெயரால் மனிதர்களுக்குள் நடக்கும் சண்டைகள் நீங்க வழிகாட்டும் நுால். – வி.ராமலிங்கம்




