Advertisement

கர்த்தரின் நாமத்தில்

₹ 130

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலையாளத்தில் சகோதரி லுாசி களப்புரா எழுதிய கர்த்தாவின் நாமத்தில் என்ற நுால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா. அவரது வாழ்க்கை கதை.மலையாளத்தில் எழுதியதை நேர்கோட்டு வார்த்தைகளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ சபைகளில், ஆலயங்களில் சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்னைகளை மிகைப்படுத்தாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகள் சுதந்திரமானவர்கள் என்று கூறப்பட்டாலும், வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது தான் என்ற சகோதரியின் வார்த்தை உயிரோட்டமாக தரப்பட்டுள்ளது. அநீதிகளை விளக்கிச் சொல்வது, வேதனை கலந்த உணர்வை ஏற்படுத்துகிறது. எல்லாருமே படிக்க வேண்டிய புத்தகம்.– எம்.எம்.ஜெ.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்