Advertisement

நுண்ணுயிருலகு

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் உலகில் நிரம்பியிருப்பதை எடுத்துரைக்கும் நுால். நுண்ணுயிரி, மனித உடலில் நோய் தரவும் வல்லது; நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும் வல்லமையும் கொண்டது. இதை கண்டறிந்த வரலாற்று பின்னணியுடன், சுவையான கதை போல் தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 10 தலைப்புகளில் நுண்ணுயிரிகள் குறித்த செய்திகள் அமைந்துள்ளன. மக்களை அச்சுறுத்திய எச்.ஐ.வி., வைரஸை அடையாளம் கண்ட பெண்கள் குறித்து சுவையான தகவல்கள் உள்ளன. நுண்ணுயிரிகளால், ‘சீஸ்’ என்ற பாலாடைக் கட்டி உருவாவது பற்றியும் கூறப்பட்டுள்ளது. மாவை புளிக்க வைக்கும், ‘ஈஸ்ட்’ என்ற பூஞ்சை குறித்தும் விளக்கப்பட்டு உள்ளது. நுண்ணுயிரியல் சார்ந்த அறிவியலை எளிமையாக விளக்கும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்