Advertisement

படிக்கலாம் வாங்க... ஸ்ரீ ஆதர்ஷ் சார் விருப்பம்


படிக்கலாம் வாங்க... ஸ்ரீ ஆதர்ஷ் சார் விருப்பம்

₹ 450

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள பாணி கோவில்களையே அதிகம் காண முடியும். தமிழக பாணி கோவில்கள் மிகவும் குறைவு. ஆனால், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் முற்றிலும் மாறுபட்டது. தமிழக பாணி கோவிலா, கேரள பாணி கோவிலா என நம்மை குழப்பி வைக்கும். இரண்டும் கலந்தது அது. இதனால் தானோ என்னவோ, இந்தக் கோவிலைத் தரிசித்தாலே... ஊஹூம்...பார்த்தாலே போதும், தேனில் தோய்த்த பலாப்பழமாய் மனம் இனிக்கும். இந்தக் கோவிலின் வரலாறு மட்டுமல்ல, அதன் அமைப்பு, வழிபாட்டு முறை, சிற்பங்கள், கல்வெட்டுகள், பிரகாரங்கள்..என அங்குலம் அங்குலமாக...அல்ல..அல்ல... எள் முனை எள் முனையாக சிறிதளவு கூட இடம் விடாமல் அலசி அலசி ஆராய்ந்திருக்கிறது இந்த புத்தகம். திருவட்டாரை அங்குள்ள மற்ற கோவில்களுடன் ஒப்பிட்டதன் மூலம், குமரியின் அனைத்துக் கோவில்களையும் வலம் வந்த பெரும் திருப்தியை நாம் பெறுகிறோம். இந்தளவு ஒரு கோவிலை அலசி ஆராய முடியுமா என்பதை மற்ற நுால் ஆசிரியர்கள் கூட இந்த நுாலைப் பார்த்து தான் பாடம் படிக்க வேண்டும் என்றால் மிகையாகாது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாசகர் மற்றும் நுாலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் இது. – தி.செல்லப்பா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்