விலைரூ.135
புத்தகங்கள்
Rating
பக்கம்: 256
மகாகவி ஜி.சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள், 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து, 56 கவிதைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின், 30 ஆண்டுகால வரலாற்றின் பதிவுகள் இவை. இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது புலப்படுவது, ஒரு மகா நதியின் பிரவாகச் சித்திரம். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் இருந்து, பள்ளத்தை நோக்கி ஓடிவரும் ஆற்றின் பெருக்கு போல் தூய்மையும், அழகும், கம்பீரமும், கருணையும் உடையது, அது என்று தொகுப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
"சிவ தாண்டவம் எனும் தலைப்பில், ஜி.சங்கர குறுப்பு எழுதுகிறார்:"கண் இமைத்து இமைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்அந்திப் பொழுதின் மனோகரமான சதாசிவனின் உச்சதாண்டவம்"ஆலிலைத் தோணியில்ஊழிக்கலைப் பிராயக்கடலில் விளையாடும் ஓங்கார மூலமேஎன கதிஎன்று அவல் பொட்டலம் தலைப்பில் வி.கே.கோவிந்தன் நாயர் முத்திரை பதிக்கிறார்.
"பொன்னின் வேதனை என்னும் தலைப்பில் நாராயணப் பணிகர் எழுதுகிறார்."பொன்னைத் தட்டி - மனமும் நினைவும் சுருங்கி - வீழ்ந்து கிடக்கும் விதியின் வார்ப்படத்தில்இப்படி நிரம்ப நிரம்பப் படித்துச் சுவைத்து மகிழலாம்.சாகித்ய அகடமி வெளியீட்டுத் தரம் பளிச்சென்று மிளிர்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!