பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி, இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, உண்ண, உடுக்க ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எதையும் தேடிக் கொண்டிருக்காமல், கிடைத்ததை பயன்படுத்தி, கிடைக்காததற்கு ஏங்காமல் இயற்கையாக வாழும் இயல்பு முதலிய யதார்த்தங்களை அழகாகச் சித்திரிக்கிறார். அந்தக்கால தலைமுறையையும், இந்தக்கால நடைமுறையையும் ஒப்பிட்டு நோக்கும் நாவல்.
எஸ்.குரு