வார இதழில் தொடராக வந்து நுாலாக்கம் பெற்றுள்ள நாவல். வாழ்வின் யதார்த்தத்தை நகைச்சுவை உணர்வோடு தருகிறது.
குதிரைப் பந்தயத்தில் துவங்கி, கல்யாண பேச்சோடு முடிகிறது. பந்தயம் நடைபெறும் இடத்திற்கே அழைத்துச் செல்கிறது. காதல், கொலை, வக்கீல் வாதம், சிறைவாசம் போன்ற சித்தரிப்புகள் காட்சி பூர்வமாக இடம் பெற்றுள்ளன.
குதிரை ரேஸ் மைதானத்தில் அமர்ந்துள்ளோர் மனநிலையை படம்பிடிக்கிறது. பணம் கட்டிய குதிரை தோற்றால் படும்பாட்டை எழுதிய விதம் நகைச்சுவை ததும்ப வைக்கிறது. புதிதாக எழுத முயல்வோருக்கு வழிகாட்டும் நாவல்.
– புலவர் ரா.நாராயணன்