உயிரும் உணர்வும் கலந்து இருப்பதாக எண்ணம் கொண்டவரின் பாடல்கள் நிறைந்த புத்தகம். பெண்ணின் ஏக்கத்தையும், ஆணின் வேட்கையையும் இனிமையாக உரைக்கிறது.
‘தரிசு நிலமாய் இருந்த என்னை புஞ்சை நிலமாய் செய்த பிள்ளை’ என்ற வரிகள் மனதை காட்டுகிறது. ஒற்றைப் பார்வையால் பெண், காதலனை என்ன பாடு படுத்துகிறாள் என்பது வளமையான வார்த்தையால் கோர்க்கப்பட்டுள்ளது. இளமை படுத்தும் பாட்டை இயம்பும் வரிகள் அற்புதம்.
ரவிவர்மா, பிகாசோ வரைந்த ஓவியங்களை, பெண்ணின் அழகு தோற்கடிக்கும் என கற்பனை வளத்துடன் தெரிவிக்கிறது. பூ, தங்கம், புன்னகை, சேலை, ஜிமிக்கி என அழகு சேர்ப்பவை பற்றியும் சுவையான செய்திகள் உடைய பாடல்கள் உண்டு. பாடலுக்கு ஏற்ற படங்களும் உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்