மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17
சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னுமான அந்த நாட்களில் சென்னையில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் எவ்விதமான பேதங்களுமின்றி, ஒற்றுமையாகச் சகோதரர்கள் போன்று வாழ்ந்த நிலையினை ஆசிரியர் தம் சிறுவயதில் நேரடியாகப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தை இன்றைய சூழலில், தமது 72 வயதில் ஒரு மறுபதிவாக, இலக்கியத்தின் மூலம் வாசகர்கள் கண்முன் கொண்டு வந்து காட்ட முயன்றிருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் சென்னை மக்கள் வாழ்வை இக்கதை மூலம் நாம் படித்துணர முடிகிறது. வித்தியாசமான முயற்சி.