Advertisement

மரபினில் பூத்த மலர்கள்


மரபினில் பூத்த மலர்கள்

₹ 999

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறள் வெண்பா இலக்கண அடிப்படையில் எழுதப்பட்ட பாக்களின் தொகுப்பு நுால். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கால சூழலில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி புனையப் பட்டுள்ளது. கல்வியின் சிறப்பை உணர்த்தும் வகையில், ‘அலைகடல் தாண்டி அறிஞரைப் போற்றி சிலை வைத்து செய்வார் சிறப்பு’ என, புதுமையாக வடிக்கப்பட்டுள்ளது. போதை போன்ற தீய பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்டியும் உருவாக்கப் பட்டுள்ளன. பாக்கள் காட்சிமயமாக அமைக்கப் பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது, கூட்டுக்குடும்ப சிறப்பு போன்ற கருத்துகளையும் மையமாக கொண்டுள்ளது. காலக் கண்ணாடியாக விளங்கும் நவீன குறட்பாக்களின் தொகுப்பு நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்