Advertisement

கருப்பு சிவப்பு காவி

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடைகளும், கேள்விகளும் இடம் பெற்றுள்ள சமயம் சார்ந்த நுால். திருவள்ளுவர் ஹிந்துவா, எது ஹிந்து மதம், யார் ஹிந்து, ஏன் ஹிந்து, கலப்புத் திருமணங்கள் சரியா, ஊடகங்கள் ஹிந்து உணர்வை காயப்படுத்துவது ஏன்? பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதியா போன்ற கேள்விகளுக்கு பளிச்சென்று பதில் சொல்லும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.முதல் தலைப்பில் ஹிந்து மதம் பற்றியும், சைவ, வைணவ பேதம் பற்றியும், சனாதன தர்மம் பற்றியும், சிந்து நதியில் இருந்தே ஹிந்து என்ற சொல் வந்திருக்கலாமா என்பது பற்றியும் எழுந்த கேள்விகளுக்கு, துஷ்யந்த் ஸ்ரீதர் சொல்லும் விளக்கம் அற்புதமாக அமைந்துள்ளது.திருவள்ளுவர் கூறும் தாமரக்கண்ணான் உலகு வைகுண்டம், உலகு அளந்தான் என்பவர் வாமன அவதார மூர்த்தி, திரு என்பவர் திருமகள் என்று திருக்குறளுக்கும், ஹிந்து சமயத்துக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டுகிறார். காவியை வள்ளுவருக்கு அணிவிப்பதில் தவறு ஏதுமில்லை என்கிறார். ஹிந்து சமயத்திற்கு எழுச்சி தரும் விவாத நுால். – முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்