Advertisement

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி

₹ 180

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‘நிம்மதி’யான வாழ்க்கைக்கு நல்வழிகாட்டி நுால். மனிதன் தன்னை உணர சில தேவைகளை பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்து அழகாக விளக்கப்பட்டுள்ளது.தேவையில்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவையை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவைகள் கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்குமிடையே மனப்பிரச்னை இருக்கிறது. மன அழுத்தமில்லா வாழ்வு தான் எல்லாரின் கனவாக இருக்கிறது. தேவைகளுக்கும், கிடைத்தவற்றுக்கும் இடையே மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால், கிடைத்தவற்றை ஏற்றுக்கொள்வதில் தான் திருப்தி இருக்கிறது. எண்ணங்கள் வார்த்தைகளாகவும், வார்த்தைகள் செயல்களாகவும், செயல்கள் நடத்தையாகவும், நடத்தை ஒரு மனிதனின் தலைவிதியாகவும் மாறுவதால், ஒரு மனிதனின் எண்ணங்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு காரணமாகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறது. வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாக அமையும் நுால்.– டாக்டர் டி.வி.அசோகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்