மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. (பக்கம்: 208).
கிரகங்களுக்கு விதிக்கேற்ப விளைவுகளைக் கொடுக்கும் ஆற்றல் மட்டுமே உண்டு. மாற்றும் ஆற்றல் இல்லை என்று அறிவோம்.
நூலாசிரியர் சுற்றுலாத் துறையில், நவக்கிரகத் தலங்களுக்கு வழிகாட்டியாக சென்று நேரடி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை மிகச் சிறப்பாக பயனுள்ள முறையில் படைத்து அளித்துள்ளார். நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அமைதி வேண்டுபவருக்கும் நவக்கிரக வழிபாடு ஒரு நல்ல வழியாகும். சூரியனார் கோயில், திங்களூர், ஆலங்குடி, திருநாகேசுவரம், திருவெண்காடு, கஞ்சனூர், கீழப்பெரும்பள்ளம், திருநள்ளாாறு, வைத்தீசுவரன் கோயில் ஆகிய இடங்களுக்கு நவக்கிரக பக்திப் பயணம் மேற்கொள்கிறீர்களா?
இந்த நூலைப் படித்து விட்டுச் செல்லுங்கள். அல்லது கையிலேயே எடுத்துச் செல்லுங்கள். அவ்வளவு பயனுள்ள புத்தகம். நவக்கிரகத்தில் வரை படமும் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கிறது.