மர்மங்கள் நிறைந்த ஜமீன் பற்றிய நாவல். நாவலின் துவக்கமே வித்தியாசமாக உள்ளது. மேஜோ குமார் என்ற ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராவ் இறந்து விடுகிறார். அவரை அடக்கம் செய்ய புறப்பட்டபோது, பெருமழை பெய்கிறது. இறந்தவர் உடலை ஓரத்தில் கிடத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
தகனம் செய்ய வைக்கப்பட்டபோது உடல் கடத்தப்படுகிறது. மேஜோ குமார் செல்வாக்கு மிக்கவர்; பெண் பித்தர். அவரது சாவில் மர்மம் நிலவியது. பின், ஜடாமுடி சாமியார் என்ற பெயரில் அவர் உலா வந்தார். மக்கள் மரியாதை கொடுத்து போற்றினர். பலரின் விசாரணைக்குப் பின் தாம் யார் என்பதை ஒத்துக்கொண்டார்.
மேஜோ குமார் சாகவில்லை. அப்படி என்றால் இறந்தவர் யார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேஜோ குமாரின் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த உலகில் எதுவும் நிலையானதில்லை என்பதை உணர்த்திய சந்நியாசியாக உலா வந்த மேஜோ குமாரின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாவல்.
–
ராம.குருநாதன்