பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014. (பக்கம்: 130)
காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ், லெனின் வழிநின்று, இயக்கவியல் பொருள் முதல் வாதப் பார்வையில் மனிதகுல வரலாற்றை விளக்கும் வகையில் அமைந்த, நாத்திக ஆதரவு நூல் இது. சூரியக் குடும்பம் தோன்றியது பற்றியும், பூமியும் ஏழு கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது பற்றியும், சூரியனுக்கும், பிற கிரகங்களுக்கும் இடையே உள்ள தூரங்கள் பற்றியும் விவரிப்பதுடன், சமுதாய அமைப்பு, தனி உடைமை ஏற்பட்டவிதம், பெண்ணாதிக்கம், ஆணாதிக்கம், அரசுகளின் தோற்றம், அடிமைகள் உருவான விதம், முதலாளித்துவத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கப் போராட்டம் என அனேக விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.