முகப்பு » இசை » சின்னஞ்சிறு நிலவே

சின்னஞ்சிறு நிலவே

விலைரூ.200

ஆசிரியர் : பேராசிரியர் புதுவைக்கிருஷ்ணா

வெளியீடு: சஞ்சீவியார் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தைகள் திறன் வளர்க்கும் பாடல்கள் பல்வேறு தலைப்புகளில், பத்து பத்து வரியாக அமைந்துள்ளன. ஓசை நயம், கருத்து வளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இயற்கை படைத்த உயிரினங்கள் முதல், மனிதன் கண்டுபிடித்து படைத்த நவீன கருவிகள் வரை, 240 பாடல்கள். கவிதை திறனும், வரிசைப்படுத்தி உள்ள திறமையும் பாராட்டுக்கு உரியன. எறும்பை பற்றி உருவில் சிறியோன் என்றும், வலிமையில் நானே வெல்வேன் என்றும் சொல்வது உண்மை தான்.
உடும்பு பிடி பிடிப்பது எப்படி என்றும் பாடிக் காட்டுகிறார். ஏலக்காயின் சுவையுடன் அந்தக் காலத்து புட்டு என்ற உணவு பற்றி பாடும்போது, நாவில் எச்சில் ஊறுகிறது. அதுபோல கொழுக்கட்டை பாட்டும் உள்ளது.
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் பற்றியும் பாடி, பிள்ளைகள் நெஞ்சில் வீரம், ஈரம் சுரக்க வைக்கிறார். பள்ளிகளில் சொல்லித் தர வேண்டிய பாடல்கள் அடங்கிய நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us