சங்க இலக்கியமான ஐங்குறுநுாற்றில் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்களை ஆய்வு செய்து கருத்துகளை தரும் நுால். இதில் குறிஞ்சித் திணையில், 100 பாடல்களை பாடியுள்ளார் கபிலர். ஒவ்வொவ்வொன்றும் தலைவி, தோழி முதலானோர் கூறுவது போல் அகத்திணையாக அமைந்திருக்கும். தலைவி, தோழி கூறுவது போல் அமைந்துள்ள பாடல்களை, தனியாக ஆய்வு செய்து கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிஞ்சி என்பது மலை நிலப் பகுதியைக் குறிக்கும். அது சார்ந்த பாடல்களில் அமைந்துள்ள உவமைகளில் யானை, உடும்பு போன்ற மலைப் பகுதிகளில் காணப்படும் விலங்குகள் இடம் பெற்றுள்ள தன்மையை எடுத்துரைத்துள்ளது. சங்க இலக்கிய ஆய்வாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்