விஜயா பதிப்பக உரிமையாளர், இலக்கிய ஆளுமைகள் 13 பேரை பற்றி அழகிய நடையில் எழுதியுள்ள நுால். எழுத்தாளர் ஜெயகாந்தனின் முதல் புத்தகத்தை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம், ‘எங்களுக்குள் கணக்குகள் உண்டு; ஆனால் வழக்குகள் கிடையாது...’ என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் – பதிப்பாளர் உறவுக்கு ஒரு மைல் கல்லாக அமைந்த நிகழ்வு இது.
கணையாழி இதழில், ‘கூலி குறைத்தோமா; குறை மரக்கால் அளந்தோமா; பிச்சைக்கு வந்தவனை பின்னே வரச் சொன்னோமா?’ என்ற பாடல் வரிகளை எழுத்தாளர் சுஜாதா எழுதிய போது, அதிகம் பேருக்கு தெரியவில்லை. ஆனால், குமுதத்தில் வெளியிட்டு கணையாழிக்கு பெருமை சேர்த்தார். எழுத்தாளர்களின் எண்ணப் புதையல்.
–
சீத்தலைச் சாத்தன்