இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநில மொழி இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நுால். காஷ்மீரி, பஞ்சாபி, ஹிந்தி, சமஸ்கிருதம், உருது மொழிகளுக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய விபரங்களை தருகிறது.
கவிதை, கதையுடன் அந்தந்த மொழி சார்ந்த பிரதேச அறிமுகம், இலக்கிய விமர்சனம் மற்றும் படைப்பாளர்களுடனான நேர்முகத்தையும் உள்ளடக்கியுள்ளது. இலக்கிய போக்கின் பன்முகத்தன்மை விளக்கப்பட்டுள்ளது.
ஒரு மொழியில் பிறந்த இலக்கியம் வாயிலாக, அது பரவியுள்ள பிரதேசத்தின் எண்ண ஓட்டத்தை, தேசிய நீரோட்டத்துடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தின் ஆன்மாவை அறிமுகப்படுத்தும் நுால்.
– ஒளி