பிரபல மலையாள எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்ந்தெடுக்கப்பட்டவை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொத்தம், 17 கதைகள் உள்ளன.
பயணங்களில், படப்பிடிப்பு தளத்தில், தங்கும் விடுதிகளில் அடிக்கடி காணும் மனிதர்களின் நடத்தையை கூர்ந்து நோக்கி, கதாபாத்திரங்களாக்கி கதைகள் படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சுவாரசியம் தருகின்றன. கதை முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை கொண்டுள்ளன.
சில கதைகள் முற்றிலும் புதிய பார்வையுடன் எழுதப்பட்டுள்ளன. கண் முன் நடமாடுவோரை புதிய கோணங்களில் நோக்கி, நிகழ்வுகளை வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளன. எளிய உரையாடல்கள் மிக்க சிறிய கதைகளின் தொகுப்பு நுால்.
– மதி