ஆசிரியர் பணி செய்த போது கிடைத்த அனுபவம், சமுதாயத்திற்கு பயன்படும் நோக்கில் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து தரும் நுால். மாணவர்களுக்கும், மக்களுக்கும் எவ்வாறு உதவ முடியும்; பள்ளியை எவ்வாறு எல்லாம் முன்னேற்றலாம் என படிப்பினையாக சித்தரிக்கிறது.
பணி ஓய்வுக்குப் பின், சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்து சவாலான பணியை செய்ததால் கிடைத்த அனுபவங்களை பகிர்கிறது. ஆன்மிகவாதிகளின் அறிமுகத்தையும், பெற்ற நன்மைகளையும் பதிவு செய்துள்ளது.
எளிமையும், நேர்மையும், ஒழுக்கமும் நிறைந்த வாழ்க்கை, சமுதாயத்திற்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பதை அனுபவப் பூர்வமாக எடுத்துக் காட்டுகிறது. அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைந்த புத்தகம்.
– ஊஞ்சல் பிரபு