வீடணனின் பண்பும், சிறப்புகளும் கூறப்பட்டுள்ள நுால். ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
மாரீசன், சுக்ரீவன், அனுமன், ராமன், திரிசடை, கும்பகர்ணன், இந்திரசித்து, ராவணன், சூர்ப்பனகை, மண்டோதரி ஆகியோர் வீடணனை எவ்வாறு நோக்கினர் என்பதைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. வீடணன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளான குலத் துரோகி, காட்டிக் கொடுத்தவன், நன்றி கொன்றவன், சகோதர பாசம் இல்லாதவன் என சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விடை தரப்பட்டுள்ளது. கும்பகர்ணன், ராமனிடம் வீடணனுக்காக வேண்டுவதும், சரணாகதி தத்துவத்திற்கு சான்றாவான் என்பதும் கூறப்பட்டுள்ளது. வீடணன் சிறப்புகளை தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்