விட்டுக்கொடுக்கும் பண்பு குறைந்து சமூகத்தில் கோபம் பெருகியுள்ளதை விவரித்து, அதற்கு சமூக காரணங்களை தேடும் நுால். கணவன் – மனைவி இடையே புரிதல் குறைந்து வருவதையும் குறிப்பிடுகிறது.
எல்லாரும் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது; தீயவராகவும் இருக்க முடியாது. இதை உணராததால் பிரச்னை ஏற்படுவதை எடுத்துரைக்கிறது. உண்மையை உணர்ந்து வாழப் பழக எடுத்துரைக்கிறது.
கற்றவர், கல்லாதவர் என பிரிக்காமல் அனுபவக் கல்வியின் மேன்மையை எடுத்துரைக்கிறது. கருத்துக்கு வலிமை சேர்ப்பது போல் இலக்கியம் எடுத்தாளப்பட்டுள்ளது. வாழும் முறையையும் எடுத்துரைக்கிறது.
இதை படித்து பின்பற்றினால் வாழும் முறையை அறியலாம். சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டி, பிரச்னைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள துணை நிற்கும் நுால்.
– வீரா