தென்றல் பத்திரிகையின் ஆசிரியர் கதிரேசன். அவரிடம் தோட்ட வேலை செய்யும் பெண் அறிவு. அவளது தம்பி அசோக், மாணவர் தலைவன். சவால் என்ற தலைப்பில் தொடர்கதை எழுதுகிறார் எழுத்தாளர் அழகம்மை.
இதை மையப்படுத்தி சவாலாக படைக்கப்பட்டுள்ள கதை. சவாலுக்கு ஏற்ற வகையில் இடையிடையே சமூகச் செயல்பாட்டை அசைத்துப் பார்க்கும் நிகழ்வுகள் உள்ளன. காலத்தால் அழியாமல் நிற்க, எதையும் முழுமையாக தெரிந்து செயல்பட வேண்டும். எதை செய்யக்கூடாது என்பதையும் புரிந்து கால் பதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஆணும், பெண்ணும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருந்தால் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும். ஆதரவு இருந்தால் செயல்பாடுகள் நல்லதாக அமையும். தத்துவம் பொதிந்த உண்மையுள்ள கதை நுால்.
– சீத்தலைச் சாத்தன்