சமூக நிகழ்வுகளை கொண்டு வடிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் தொகுக்கப்பட்டுள்ளது.
‘நெருப்புக்குள் ஒரு நியாயம்’ கதை, பிஞ்சு குழந்தைகளுக்கு பால் வினியோகிக்கும் அக்கறையில் உள்ள தியாகமும், அதன் முடிவும் நீங்காத சித்திரம். அதே மாதிரி வடிவத்தை அம்மாச்சி என்றொரு கதையில், ரயில் நிலையத்தில் திருடனை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் காண முடிகிறது
மொழி தெரியாத அபலைத் தாயை சிறிய பொய் சொல்லி காப்பாற்றும் தன்மையை உணர்ச்சியோடு சொல்கிறது, ‘மெய் போலும்’ சிறுகதை. ஒவ்வொரு கதையிலும் மனிதர்களின் உயர் குணங்களான தியாகம், துணிவு போன்றவற்றின் அணிகலன்களாக கதாபாத்திரங்கள் நிற்கின்றன.
-– ஊஞ்சல் பிரபு