தேடல் நோக்கிய பயணத்தில் குடும்பம், உறவு, சமூகம் தாக்கம் ஏற்படுத்துவதை விவரிக்கும் நுால். சொற்களாலும், பார்வையாலும், முகபாவனையாலும் வன்முறையை நிகழ்த்த முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
உணர்வை காட்ட மொழியை பயன்படுத்துவது, குழந்தை வளர்ப்பும் சமூகப் பொறுப்பும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பது, பாராட்டும் இன்சொல்லும் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.
தாழ்வான மதிப்பு, அவமான உணர்வுக்கான வேறுபாடு பதிவிடப்பட்டுள்ளது. எதையும் புரிதலுடன் அணுகுதல், விழிப்புணர்வோடு பேசுதல் என பயிற்சி, முனைப்பு தேவை என்பதை அருமையாக விவரிக்கிறது.
முரண்பாடு, சச்சரவு, குழப்பம், வன்முறை நீங்க வழிகாட்டும் உன்னத நுால்.
– புலவர் சு.மதியழகன்