சுய பாதுகாப்புக்கு பயன்படுத்தும் அடிமுறை கலை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். இதை பயிற்றுவிக்கும் ஆசான்களை சந்தித்து தகவல்களை திரட்டி தருகிறது.
மொத்தம், 25 தலைப்புகளை உடையது. கன்னியாகுமரியில் துவங்கி, அமெரிக்கா சென்ற களரி என முதல் இயல் துவங்குகிறது. உலக நாடுகளில் இது பரவும் விதம் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது.
வரலாற்று ரீதியாக அடிமுறைக்கலை தோன்றிய விபரங்கள் உரிய ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளது. புராண தகவலும் அலசலுடன் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த கலையின் தீவிரத்துடன் இந்த கலை பற்றிய விபரங்களை மிக தெளிவாக தருகிறது.
இந்த புத்தகத்தை வாசிப்பது, ஒரு பயணம் மேற்கொள்ளும் அனுபவம் போல் இருக்கிறது. தமிழகத்தில் வளர்ந்த அபூர்வ கலையை காட்டும் கருவூலம்.
– மதி