குலதெய்வ வழிபாட்டின் சிறப்பை உணர்த்தும் நுால். ஐந்து நிலைத் தெய்வங்கள், சிறு தெய்வங்களின் தோற்றம், பெண் தெய்வங்கள் என்பது உட்பட, 10 தலைப்புகளில் விளக்குகிறது.
முக்கிய மூன்று தெய்வங்களின் படைப்பு, காப்பு, அழிப்பு பணிகளுக்கு துணையாக இருப்பது பார்வதி, திருமகள், கலைமகள். முதல்நிலை தெய்வங்கள் சிவன் – பார்வதி, பெருமாள் – மகாலட்சுமி. இவையே குலம், இஷ்ட தெய்வங்களாக மாறின என்கிறது.
இரண்டாம் நிலை துணை தெய்வங்கள் கணபதி, முருகன், வீரபத்திரர், அனுமன். மூன்றாம் நிலையில் காவல் தெய்வங்களான காத்தவராயன், சப்த மாதர் என பலவற்றை விளக்குகிறது. குலதெய்வ வழிபாட்டை சுட்டிக்காட்டி அதன் சிறப்பை விளக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்