வறுமையில் வாழுவோரின் மன எழுச்சியை மையப்படுத்திய படைப்புகளின் தொகுப்பு நுால். கவிதை, கதை ஆக்கங்கள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன.
வறுமை, சுரண்டல், வாய்ப்பு கிடைக்காமை போன்ற அவலங்களுடன் வாழ்வோரின் நம்பிக்கை நிறைந்த வாழ்வை படைப்புகள் காட்டுகின்றன. அவை பல வடிவங்களுக்கு உட்பட்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்கள் சார்ந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து, தமிழ் மொழியில் தரப்பட்டுள்ளது.
தற்கால சிந்தனைக்கு ஏற்ப வடிவமும், பொருளும் உள்ளன. மாறுபட்ட சூழல்களில் கலைகள் உருவாகி முகிழ்த்துள்ளன. நெகிழ்ச்சியான ஒரு கவிதை, ‘காட்டுப்புல்லைப் போல் உன் ஆடையை பற்றிக்கொள்வேன்’ என்கிறது. வாழ்வுக்கான போராட்டத்தை பிரதிபலிக்கிறது. பசித்திருக்கும் தலைமுறையை காட்டும் நுால்.
– ராம்