சங்க இலக்கிய மாந்தர்களின் மனநிலையை மூன்று நிலைகளில் ஆய்வு செய்துள்ள நுால். தலைவி, தோழி மனநிலையையும், செவிலி, நற்றாய் மனநிலையையும் தெளிவுபட அறிந்து உணர்த்தப்பட்டுள்ளது.
தலைவன் – தலைவி ஊடல்கால மனநிலை, பிரிந்து செல்லவேண்டிய சூழலில் உள்ள நிலை, அதை தவிர்க்கும்போது உள்ள மனநிலையும் விவரிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் மனித மனநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பது உளவியல் பார்வையில் அணுகப்பட்டுள்ளது. ஆய்வு செய்வோருக்குப் பயனுள்ள நுால்.