சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
அகழாய்வுகள், ஆழிப்பேரலைகளால் புலம் பெயர்வுகள், வரலாற்றுத் தகவல்களை எடுத்துக்காட்டுகிறது. சிந்து சமவெளி, மொஹஞ்சதாரோ, -ஹரப்பாவில் கிடைத்த எழுத்து வடிவங்கள் பற்றியும் அலசுகிறது.
சங்க கால அகத்திணை மரபுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகையில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள், தொன்மங்கள், நாடகப் பண்பை விளக்குகிறது. சங்க கால வாழ்வையும், வரலாற்றையும், இலக்கியச் செழுமையையும் வெளிப்படுத்தும் கருவூலம்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு