விதிக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை வலிமையாக எடுத்துரைக்கும் நாவல். இரண்டு பாத்திரங்களை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. வாழ்க்கை வரலாறு போல் நிகழ்வுகளுடன் படைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் நடப்பது எல்லாம் கடவுளால் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. அப்படி தீர்மானிக்கப்பட்டதை தான், ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாத காரணத்தால் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிட்டால் நிம்மதி பறிபோய் விடும். விதியின் போக்கையும், அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கிறது. உண்மை வரலாறு போல் சொல்லப்பட்டுள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்