அனுபவம் வெளிப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
முதல் கதை, ராதா கல்யாணம். இதன் இறுதியில், ‘மாப்பிள்ளை ஒரு நிம்மதி சந்தோஷத்துடன் ராதாவைப் பார்த்தான். அவள் வெட்கித் தலை குனிந்தாள்...’ என உள்ளது. இக்காலத்தில் பெண் பார்க்கும் படலம் நடக்கும் எந்த வீட்டிலாவது, இப்படி ஒரு அனுபவத்தை பார்க்க முடியுமா...
மாப்பிள்ளை முன் நேருக்கு நேர் நின்று, ‘நான் வேலை பார்க்கிறேன்; நீயும் வேலைக்கு போகிறாய். நீ உன் வீட்டுக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும்; நானும் இவ்வளவு கொடுப்பேன்...’ என்று பேரம் பேசுவது மட்டும் தானே காதில் விழுகிறது. ஒவ்வொரு கதையும் மணி மணியான படிப்பினைகளை தரும் வகையில் உள்ளன.
– தி.செல்லப்பா