இந்திய சமூக நிலையில் உள்ள பிரச்னையை எளிமையாக அலசும் நுால். ஆங்கிலத்தில் பேராசிரியர் காஞ்சா அய்லய்யா, கார்த்திக் ராஜா கருப்பசாமி தொகுத்தது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் நிலவும் ஜாதி படிநிலையின் அடுக்கில், அடியில் உள்ள மக்களின் பிரச்னைகளை தனிக்கவனம் செலுத்தி ஆராய்ந்து தகவல்களை உரைக்கிறது. ஜாதி பெயர்கள் குறித்த ஆராய்ச்சியில் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அவை எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்ற செய்தி வியப்பூட்டும் வகையில் உள்ளது.
ஜாதி அமைப்புகள் குறித்து நுட்பமான பார்வையில் கட்டுரைகள் உள்ளன. பல தளங்களிலும் அவை நிலை பெற்றுள்ளது குறித்து உரைக்கிறது. ஜாதி பாகுபாட்டை களைந்தால் தான், இந்தியாவில் ஜனநாயகம் முழுமை பெறும் என்ற விவாதத்தை வலுவாக்கும் நுால்.
– ராம்