தமிழரின் ஐந்திணை வாழ்வு நெறிப் பண்பாட்டை விரித்துரைத்து, தமிழிலக்கியம் மற்றும் இலக்கண வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை தொகுத்து தரும் நுால்.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் கூறப்பட்ட அகத்திணைக் கோட்பாடுகளை விளக்கி, அகம், புறம் சார்ந்த பண்டை கால வாழ்க்கை அமைப்பை முன்வைத்து விளக்கம் தருகிறது. சங்ககால அகப்பாடல்களில் பொதிந்துள்ள உள்பொருள் பற்றி எளிய நடையில் விளக்குகிறது.
ஐந்திணை மாந்தரின் நடத்தையில் உளவியல் வெளிப்பாட்டு சூழலை விளக்கியிருப்பது சிறப்பு. புறநானுாற்று போர்மறவர்கள் நடத்தையில் நிகழும் மாற்றங்களுக்கு உரிய துாண்டுதல்களை காட்டுகிறது. இலக்கிய ஆராய்ச்சியில் கருத்தோட்டங்கள் நிறைந்த நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு