கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
என்னால் உங்களுக்கு எதுவும் கூறமுடியாது. உங்களால் எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில், நான் கூறிக்கொண்டிருப்பதைப் பொறுத்தவரையில் அதற்கான தொடர்புப்புள்ளி எதுவும் கிடையாது என்று நீங்கள் புரிந்துகொண்டுவிட்ட பின்னர், சொல்லுவதற்கும், கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கும் என்ன இருக்கிறது? கருத்துப் பரிமாற்றமே தேவையில்லை. எனவே, கருத்துப் பரிமாற்றத்திற்கான சாத்தியப்பாடு பற்றி விவாதிப்பதில் அர்த்தமேயில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற உங்களது ஆசையே சாதிப்பதற்கான பொதுவான நடைமுறையின் ஒரு அங்கமாகும். கருத்துப் பரிமாற்றத்திற்கான ஆசை என்ற திரைக்குப் பின்னால் உங்களது பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஏதோ ஒரு வெளி சக்தியின் மீதான சார்புநிலையே மறைந்துள்ளது. இந்த உலகில் செலய்படுவதற்குத் தேவையான நடைமுறைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான வெகு இயல்பான தேவையைத் தவிர, கருத்துப்பரிமாற்றம் பற்றிய உங்களது ஆர்வம், உங்களது செயலற்ற நிலை மற்றும் வெளியில் உள்ள ஏதோ ஒன்றின் ஆதரவிற்கான தேவை இவை மட்டுமே. வெளியில் உள்ள ஒரு சக்தியின் மீது நீங்கள் சார்ந்து நிற்பதால் உங்களது செயலற்ற நிலை தொடர்கிறது. வெளியில் உள்ள அந்த சக்தி உண்மையானதோ, போலியானதோ, அதன் மீதான உங்கள் சார்புநிலை இல்லாமல் போகும்பொழுது கருத்து ரீதியில் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான ஆசையும் இல்லாமல் போகிறது. ஒன்று போய்விட்டால் மற்றொன்றும் போயாக வேண்டும். நம்பிக்கை பற்றிய கருத்துக்கள் உங்களிடம் இருப்பதால்தான் உங்கள் சூழ்நிலையும், எதிர்கால சாத்தியப்பாடுகளும், நம்பிக்கையற்றுத் தோற்றமளிக்கின்றன. அந்த நம்பிக்கையை உடைத்தெறியுங்கள்; அப்போதே உங்களை முடமாக்கும் நம்பிக்யைற்ற உணர்வுகளும் அதோடு சேர்ந்து அழிந்து போய்விடும். நிறைவேறக்கூடும் என்ற நம்பிக்கையோடு உறவு கொண்டு நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வரையில் உதவியற்ற நிலை மற்றும் அளவற்ற நம்பிக்கையின்மை ஆகியவை இருந்தே தீரும். ஏனெனில், நிறைவேறுதல் என்பது இல்லவே இல்லை. இதுதான் உங்கள் பிரச்னையின் ஆதாரம்.