தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு மக்களின் வாழ்வியலை தொன்றுதொட்டு எடுத்துக்காட்டி வருகின்றன என்பதை விளக்கி சொல்லும் நுால்.
சங்க கால இலக்கியத்தில் சேர மன்னர்களின் கடல் பயணச் சிறப்பு, வெறியாட்டுப் பாடல்கள், பண்டைய கல்வி, பரத்தமை ஒழுக்கம் பற்றிய குறிப்புகள் ஆய்வுத்திறனை வெளிப்படுத்துகின்றன. சங்க கால பெண்கள் பற்றிய நோக்கும், கருத்தோட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழர் பண்பாடு, இலக்கியச் செழுமை, வரலாற்றுக் கூறுகள், அரசியல் நிலைப்பாடு, சமூகக் கட்டமைப்பு, கொடை சிறப்பு, வழிபாடு போன்றவற்றை அலசுகிறது. தமிழ் மொழி ஒரு ஒப்பற்ற உலகக் களஞ்சியம் என நிறுவும் கருவூலம்.
-– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு