சங்க கால பாடல்களின் தாக்கம், திரையிசை வழியாக மனித மனங்களை தொட்டதை கூறும் நுால். திருக்குறள், திருமந்திரம், கம்ப ராமாயணத்திலும் பயன்பட்டுள்ள விதத்தை புரிய வைக்கிறது. கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன் அப்படியே பயன்படுத்தியதை கூறுகிறது.
சங்க நுால்களை, இந்த நுாற்றாண்டு மொழி எப்படி இணைக்கிறது என அலசுகிறது. சங்க கால பாடல் வரிகள், அதன் பொருள், திரையிசைக்காக எழுதிய வரிகள், திரைப்படம், பாடலாசிரியர் என பிரித்து எளிமையாக தந்துள்ளது. பாடல் எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.